"உங்களையும், குடும்பத்தையும் பாருங்க, சண்டை போடாதீங்க" - தல அஜித் ரசிகர்களுக்கு அறிவுரை.!
வெளிநாடு வேலைக்கு செல்ல மறுத்து அடம்; தாயின் அறிவுரையால் இளைஞர் தற்கொலை.!
தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் பகுதியில் வசித்து வருபவர் ராஜா (வயது 29). இவர் குவைத் நாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். இதனிடையே, விடுமுறை எடுத்து கடந்த ஒரு மாதம் முன்பு சொந்த ஊர் வந்துள்ளார்.
சொந்த ஊருக்கு வந்தவர், தான் உள்ளூரில் தொழில் செய்யப்போவதாகவும், மேற்படி வெளிநாட்டிற்கு செல்லவில்லை எனவும் கூறி வந்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவரின் தாயார், இன்னும் குறைந்தது 2 ஆண்டுகள் வெளிநாட்டில் இருக்க சொல்லியுள்ளார்.
இதையும் படிங்க: குழந்தையில்லாததால் விரக்தி? மனைவியை கொலை செய்து கணவர் தற்கொலை.!
தாயின் அறிவுரை
2 ஆண்டுகள் கழித்து வந்து தொழில் செய்தால் பிரச்சனை இல்லை. வருமானமும் கிடைக்கும் என கூறியுள்ளார். இதற்கு ராஜா மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். இதனால் தாய் - மகன் இடையே அவ்வப்போது வாக்குவாதம் எழுந்து வந்துள்ளது.
இளைஞர் தற்கொலை
இந்நிலையில், சம்பவத்தன்று ராஜா - அவரின் தாய் இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ராஜா, விரக்தியில் செய்வதறியாது விஷம் குடித்துள்ளார். பின் அவர் குடும்பத்தினரிடம் கூறி மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டாலும், விஷம் உடலில் பரவி அவர் உயிரிழந்தார்.
இதையும் படிங்க: சிக்கி தவிக்கிறேன்.. வீட்டு புரோக்கர் எடுத்த விபரீத முடிவு.! போலீசார் கண்ட ஷாக் வீடியோ!!