பெண்களே கவனம்.! அகல்விளக்கு தீ சேலையில் பரவி பரிதாபம்; தொழிலதிபரின் மனைவி போராடி பலி.!
அகல்விளக்கு போன்றவற்றில் தீபம் ஏற்றும்போது, சேலை அணிந்துள்ள பெண்கள் கவனக்குறைவாக செயல்பட்டால் எந்த மாதிரியான விபரீதம் நடக்கும் என்பதற்கு இந்த சம்பவம் ஓர் சாட்சியாக அமைந்துள்ளது.
சென்னையில் உள்ள தியாகராய நகர், டாக்டர் நாயர் சாலை பகுதியில் வசித்து வருபவர் முருகப்பன் (வயது 60). இவர் கப்பலுக்கு தேவையான உதிரி பாகம் செய்யும் தொழிற்சாலை வைத்து அண்டத்துகிறார். முருகப்பனின் மனைவி ஆண்டாள் (வயது 58). கடந்த நவ. 4ம் தேதி வீட்டில் அகல்விளக்கு கொண்டு தீபம் ஏற்றினார்.
இதையும் படிங்க: பர்வத மலைப் பயணத்தில் சோகம்; கள்ளக்குறிச்சி நபர் மாரடைப்பால் மரணம்.!
படுகாயத்துடன் மீட்பு
அச்சமயம், அகல் விளக்கில் இருந்த தீ சேலையில் பிடித்து எரிந்துள்ளது. மளமளவென எரிந்த தீயினால் அதிர்ந்துபோன ஆண்டாள் அலறினார். சத்தம் கேட்டு வந்தவர்கள் அவரை மீட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்தனர். பலத்த தீக்காயத்துடன் அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சை பலனின்றி பலி
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் கடந்த 14 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்தவர், நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து பாண்டி பஜார் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: தண்ணீர் தொட்டியில் விழுந்து 6 வயது சிறுமி மரணம்; வீட்டு வாசலில் நடந்த துயரம்.. பெற்றோர்களே கவனம்.!