கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
ஆட்டோ ஓட்டுநர் வெட்டிக்கொலை; தாம்பரம் பேருந்து நிலையத்தில் நடந்த பரபரப்பு சம்பவம்.!!
சென்னையில் உள்ள தாம்பரம், இரும்புலியூர், ஏரிக்கரை பகுதியில் வசித்து வருபவர் கார்த்திக் ராஜா. இவர் ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார்.
கார்த்திக் ராஜாவின் மீது தாம்பரம் உட்பட அங்குள்ள பல காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இந்நிலையில், தாம்பரம் பேருந்து நிறுத்தத்தில் சவாரிக்காக நேற்று இரவு நின்றுகொண்டு இருந்தார்.
இதையும் படிங்க: ரூ.6 இலட்சம் நகைக்காக மூதாட்டி இரும்பு ராடால் அடித்தே கொலை; வாடகைக்கு குடியிருந்த வடமாநில இளைஞரின் அதிர்ச்சி செயல்?.!
சரமாரியாக வெட்டிக்கொலை
அச்சமயம் அங்கு வந்த மர்ம கும்பல், கார்த்திக் ராஜாவை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது. இந்த சம்பவத்தில் நிகழ்விடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், கார்த்திக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே, கார்த்திக் ராஜாவை கொலை செய்ததாக ஆட்டோ ஓட்டுநர் ஆனந்தன், அவரது கூட்டாளிகளான ரஞ்சித், கெவின், ஷாம், அஜித் உட்பட ஐந்து பேர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.
விசாரணையில் ஆட்டோ ஓட்டுநர்களான கார்த்திக் ராஜா, ஆனந்தன் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மற்றும் சண்டைக்கு பின்னர் கொலை சம்பவம் நடந்து உறுதி செய்யபட்டுள்ளது.
இதையும் படிங்க: சென்னையில் பிரபல ரவுடி சரமாரியாக வெட்டிக்கொலை; பழிக்கு பழியாக நடந்த பயங்கரம்.!!