"என் வீட்டுக்காரருக்கு சுத்திப்போடணும்" - மதகஜராஜா ரிலீஸ் குறித்து குஷ்பூ நெகிழ்ச்சி பேட்டி.!
காதலனின் வீட்டில் காதலி மர்ம மரணம்.. உடலெல்லாம் காயங்கள்.. பெற்றோர் கண்ணீர் குமுறல்.!
சென்னையில் உள்ள தேனாம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஜெகன். இவரின் மகள் ஸ்ரீஷா (வயது 20). இவர் பட்டப்படிப்பு பயின்றுவிட்டு, தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். ராமாபுரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம், பின்னாளில் நட்பாக மாறி இருக்கிறது.
இதனையடுத்து, இருவரும் காதலித்து வந்துள்ளனர். கடந்த 27ம் தேதி மணிகண்டனின் உடல்நிலை சரியில்லை. இதனால் அவரை பார்த்துவிட்டு வருகிறேன் என ஸ்ரீஷா பெற்றோரிடம் கூறிவிட்டு காதலர் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதையும் படிங்க: இன்ஸ்டாவில் எமனாக வந்த மெசேஜ்; மார்பிங் போட்டோவால் மாணவி தூக்கிட்டு தற்கொலை.!
இளம்பெண்ணின் சாவில் மர்மம்
இதனிடையே, நேற்று மணிகண்டன் ஸ்ரீஷாவின் பெற்றோருக்கு தொடர்புகொண்டு, அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறியுள்ளார். தகவல் அறிந்து சென்ற பெற்றோர் மகளின் உடலை கண்டு கதறியழுதனர்.
இஹ்த விஷயம் குறித்து காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீஷாவின் உடலில் காயங்கள் இருப்பதால், அவர் அடித்து கொலை செய்யப்பட்டாரா? என விசாரணை நடைபெறுகிறது.
இதையும் படிங்க: மனைவியுடன் பிறந்தநாளை கொண்டாடிவிட்டு அடுத்த கணமே விபரீதம்.. கண்ணீரில் மனைவி.!