"உங்களையும், குடும்பத்தையும் பாருங்க, சண்டை போடாதீங்க" - தல அஜித் ரசிகர்களுக்கு அறிவுரை.!
மனைவியுடன் பிறந்தநாளை கொண்டாடிவிட்டு அடுத்த கணமே விபரீதம்.. கண்ணீரில் மனைவி.!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில், குளச்சல், உடையார்விளை பகுதியில் வசித்து வருபவர் சந்திரன். இவரின் மகன் தினேஷ் பாபு (31). இவர் ஆட்களை வைத்து தையல் வேலைகளை செய்து வருகிறார்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னதாக நாகர்கோவில் பகுதியில் வசித்து வரும் 29 வயதுடைய பெண்மணியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இதனிடையே, கடந்த சில மாதங்களாகவே தினேஷின் தொழில் நஷ்டம் அடைந்துள்ளது.
தொழில் நஷ்டத்தால் துயரம்
இதனால் ரூ.10 இலட்சம் வரை அவர் கடன்வாங்கிய நிலையில், மனமுடைந்து காணப்பட்டுள்ளார். தினேஷின் மனைவி சாந்தியும் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு, தற்போது பெற்றோரின் வீட்டில் இருக்கிறார். இந்நிலயில், நேற்று முன்தினம் தினேஷுக்கு 31 வது பிறந்தநாளில் கொண்டாப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தீராத சர்க்கரை நோயுடன் கால்களில் புண்கள்; மருத்துவமனையிலேயே தூக்கில் தொங்கிய நோயாளி.!
மனைவியின் வீட்டிற்கு சென்று பிறந்தநாளை கொண்டாடியவர், மாலை நேரத்தில் மகிழ்ச்சியுடன் தனது வீட்டிற்கு திரும்பி இருக்கிறார். இதனிடையே, வீட்டில் வந்து கடன் தொல்லை குறித்து சிந்தித்து மனமுடைந்த தினேஷ் பாபு, தூக்கிட்டு தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொண்டார்.
இந்த விஷயம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதையும் படிங்க: பள்ளிக்குச்சென்று படிக்க வற்புறுத்தியதால் துயரம்; தூக்கில் தொங்கி உயிரை மாய்த்த 15 வயது சிறுவன்.!