கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
டேய் படிடா... அறிவுரை கூறிய அம்மா, தம்பி கழுத்தறுத்து கொலை.. அமைதியாக இருந்து அதிர்ச்சி தந்த மூத்த மகன்.!
தாயின் அறிவுரையால் ஆத்திரமடைந்த கல்லூரி மாணவரின் வாழ்க்கையை புரட்டிப்போட்ட கொலை சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
சென்னையில் உள்ள திருவொற்றியூர், திருநகர் பகுதியில் வசித்து வருபவர் முருகன். இவர் வெல்டராக பணியாற்றி வருகிறார். தற்போது வெளிநாட்டில் இருந்தபடி வேலை பார்த்து வந்த முருகன், ஆண்டுக்கு ஒருமுறை விடுமுறை எடுத்து வீட்டிற்கு வந்துசெல்வது வழக்கம். அந்த வகையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அவர் சொந்த ஊர் வந்து சென்றுள்ளார்.
இதையும் படிங்க: மூடநம்பிக்கையால் வெறிச்செயல்.! பிறந்து 38 நாட்களே ஆன குழந்தைக்கு தாத்தா செய்த கொடூரம்!! பகீர் சம்பவம்!!
முருகனுக்கு பத்மா என்ற மனைவி இருக்கிறார். இவர் அண்ணா சாலையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். தம்பதிகளுக்கு நித்தேஷ் என்ற மூத்த மகன் இருக்கிறார். இவர் பி.எஸ்.சி மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார். இரண்டாவது மகன் சஞ்சய், 10ம் வகுப்பு பயின்று வந்துள்ளார்.
தாய், மகன் சடலமாக மீட்பு
இந்நிலையில், சம்பவத்தன்று தனது தம்பி மற்றும் தாயை கொலை செய்துவிட்டதாகவும், வீட்டின் சாவி வாசலில் இருப்பதாகவும் நித்தேஷ் தனது பெரியம்மா மகளுக்கு வாட்ஸப்பில் குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு தலைமறைவாகி இருக்கிறார். இதனையறிந்து அதிர்ந்துபோன பெண்மணி, குடும்பத்தினருக்கு தகவலை தெரிவித்து விரைந்து சென்று அங்கு பார்த்துள்ளார். அப்போது, வீட்டினுள் பத்மா மற்றும் சஞ்சய் கழுத்தறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளனர்.
பின் இதுகுறித்து தகவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து நித்தேஷை தேடி வந்த நிலையில், திருவொற்றியூர் கடற்கரையோரம் அவர் கைது செய்யப்பட்டார்.
3 மாதங்களுக்கு முன்பே திட்டம்
அவரிடம் நடந்த விசாரணையில், கல்லூரி படிப்பில் கோட்டைவிட்டு 10 அரியருடன் சுற்றிவந்த நித்தேஷை தாய் கடுமையாக கண்டித்து இருக்கிறார். இதனால் மகனுக்கு தாயின் மீது வெறுப்பு ஏற்பட்டு, அவரை கொலை செய்ய கடந்த 3 மாதத்திற்கு முன்பே கத்தி உட்பட ஆயுதங்களை வாங்கி வைத்துள்ளார். அப்போது அப்பா வந்துவிட்ட காரணத்தால் கொலை சம்பவத்தை அரங்கேற்றம் காலம் தாழ்த்தி இருக்கிறார். பின் அவர் வெளிநாடு சென்ற சில மாதங்களில் தாய் மகனை கண்டித்ததால் அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
சம்பவத்தன்று தனது திட்டப்படி உறக்கத்தில் இருந்த தாயின் கழுத்தை அறுத்து கொலை செய்தவர், தனது தாய் இல்லாமல் சென்றுவிட்டால் தம்பி தனியாக தவிப்பார் என்று கூறி அவரின் கழுத்தையும் அறுத்துக்கொலை செய்துள்ளார். பின் கொலை சம்பவத்தை உணர்ந்து பெரியம்மா மகளுக்கு செய்தி அனுப்பி தலைமறைவாகியிருக்கிறார். காவல் துறையினர் நித்தேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அமைதியான இளைஞர் கொலையாளியான பகீர் சம்பவம்
இந்த விஷயம் குறித்து முருகனின் உறவினர்கள் கூறுகையில், "நித்தேஷ் இவ்வாறு செய்வார் என யாருமே எதிர்பார்க்கவில்லை. அவருக்கு குடிப்பழக்கம், போதைப்பழக்கம் என எந்த விதமான கெட்டபழக்கமும் இல்லை. நல்ல குணம் கொண்டவராகவே இதுநாள் வரை இருந்தார். கல்லூரிக்கு சென்று, பின் வீட்டிற்கு வந்துவிடுவார். செல்போன், டிவி பார்ப்பார். எந்தவிதமான கேடான சாவகாசமா இல்லை எனினும், தாய் படிக்க கூறிய அறிவுரையை கேட்க இயலாமல் இவ்வாறு செய்வார் என நாங்கள் எதிர்பார்க்கவேயில்லை" என தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: ஜோதிடத்தை நம்பி பிறந்து 38 நாட்கள் ஆன பேரனை கொன்ற தாத்தா; அரியலூரில் நடுங்கவைக்கும் சம்பவம்.!