"உங்களையும், குடும்பத்தையும் பாருங்க, சண்டை போடாதீங்க" - தல அஜித் ரசிகர்களுக்கு அறிவுரை.!
மூடநம்பிக்கையால் வெறிச்செயல்.! பிறந்து 38 நாட்களே ஆன குழந்தைக்கு தாத்தா செய்த கொடூரம்!! பகீர் சம்பவம்!!
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டான் அருகே உட்கோட்டை கிராமத்தில் வசித்து வருபவர் வீரமுத்து. இவரது மகள் சங்கீதா. இவருக்கு கும்பகோணம் சுந்தரபெருமாள் கோயில் வடக்கு வீதியில் வசித்து வரும் பாலமுருகன் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு கடந்த 38 நாட்களுக்கு முன்பு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது.
தண்ணீர் பேரலில் இறந்துகிடந்த குழந்தை
சங்கீதா தனது குழந்தையுடன் உட்கோட்டை கிராமத்தில் தந்தை வீட்டில் தங்கி வந்துள்ளார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு அதிகாலை தாயின் அருகே தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை காணவில்லை என குடும்பத்தினர்கள் பதறிப்போய் தேடியுள்ளனர். அப்பொழுது குழந்தை வீட்டின் பின்புறம் இருந்த தண்ணீர் பேரலில் துணியுடன் மூழ்கடிக்கப்பட்டு இறந்த நிலையில் கிடந்துள்ளது. இதனை கண்டு பதறிப்போன குடும்பத்தினர் உடனே குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இதையும் படிங்க: ஜோதிடத்தை நம்பி பிறந்து 38 நாட்கள் ஆன பேரனை கொன்ற தாத்தா; அரியலூரில் நடுங்கவைக்கும் சம்பவம்.!
மூடநம்பிக்கையால் வெறிச்செயல்
மேலும் இதுகுறித்து போலீசாரிடம் புகாரளிக்கப்பட்ட நிலையில் அவர்கள் சங்கீதா அவரது தாய் மற்றும் தந்தை ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்பொழுது தந்தை வீரமுத்து முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். பின்னர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் அவர் குழந்தை சித்திரை மாதம் பிறந்ததால் தனது உயிருக்கு ஆபத்து, மேலும் தனக்கு கடன் சுமை அதிகமாகும் என்ற மூடநம்பிக்கையால் பேரனை தண்ணீர் பேரலில் அமுக்கி கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கடைசியா ஒரேயொரு தடவை... கெஞ்சிய கள்ளக்காதலன்.. மறுப்பு தெரிவித்த பெண் பேருந்து நிலையத்தில் படுகொலை.!