#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வாவ் சூப்பர்.... நடிகை கீர்த்தி சுரேஷ் உடன் இணைந்து நடித்துள்ள குக் வித் கோமாளி நடுவர்... வைரலாகும் புகைப்படம்!!
தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா, விக்ரம், விஷால் என பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து எக்கச்சக்கமான படங்களில் நடித்து முன்னணி நாயகியாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவருக்கு என்று ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தற்போது மாமன்னன் மற்றும் சைரன் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இவர் சினிமாவில் மட்டுமின்றி விளம்பரங்களிலும் நடித்து வருகிறார்.
தற்போது கூட சமையல் சார்ந்த விளம்பர ஒன்றில் நடித்துள்ளார். அதில் குக் வித் கோமாளி நடுவர்களுள் ஒருவரான செஃப் தாமுடன் இணைந்து நடித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை செஃப் தாமு தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.