#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
80 கிலோ டு 50 கிலோ..! பயங்கர ஒல்லியாக மாறி ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய குண்டு பையன் பரத்.! இப்போ என்ன செய்கிறார் தெரியுமா.?
உலக நாயகன் கமல் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற பஞ்சதந்திரம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ் சினிமாவில் பிரபலமானவர் பரத். அதனை தொடர்ந்து பல தமிழ், தெலுங்கு என பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
மேலும் நட்சத்திரத்திற்கான பல்வேறு சிறந்த விருதுகளையும் வாங்கியுள்ளார் மாஸ்டர் பரத். சினிமா மட்டும் இல்லாமல் சீரியலிலும் நடித்துள்ள இவர், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மைடியர் பூதம் தொடரில் சிறப்பாகா நடித்திருப்பார்.
விஜய், அசின் நடிப்பில் வெளியான போக்கிரி திரைப்படம் இவரது சினிமா பயணத்தில் முக்கியமான படங்களில் ஓன்று என கூறலாம். சிறுவனாக சினிமாவில் கலக்கிவந்த இவர் தற்போது பெரிய பையனா வளர்ந்து மிக ஸ்லிம்மாகவும் ஆகிவிட்டார்.
சிறுவனாக இருந்தபோது அதிக எடையுடன் இருந்த பரத், அப்போது ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மிகவும் ஒல்லியாக மாறிவிட்டார். அவரின் புகைப்படம் இணையத்தில் வெளியானதை பார்த்த நெட்டிசன்கள் குட்டி பையன் பரத்தா இது. ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப்போய் விட்டாரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.
மேலும் பரத் தற்போது படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறாராம். விரைவில் மீண்டும் சினிமா துறைக்கு வருவதாகவும் கூறியுள்ளார்.