#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அட.. சூர்யா - ஜோதிகா ரீல் மகளா இது..? சேலை கட்டி, செம மாடர்னா இப்போ எப்படி இருக்காங்க பாருங்க!!
சூர்யா மற்றும் ஜோதிகாவுக்கு மகளாக நடித்த குட்டி பெண்ணின் தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.
விளம்பர படங்கள் மூலம் அறிமுகமாகி பின்னர் சில்லுனு ஒரு காதல் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் குழந்தை நட்சத்திரம் ஸ்ரேயா ஷர்மா. சில்லுனு ஒரு காதல் திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றநிலையில் அந்த படத்தில் குழந்தையாக நடித்த ஸ்ரேயா ஷர்மாவும் மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.
ஆனால் அதன்பிறகு இவரை எந்த படங்களிலும் பெரிதாக காண முடியவில்லை. இந்நிலையில் தற்போது 23 வயதாகும் ஸ்ரேயா ஷர்மா படங்களில் நாயகியாக நடிக்கும் அளவிற்கு வளர்ந்துவிட்டார். சில ஆண்டுகளுக்கு முன் தெலுங்கு படங்களில் நடிகையாக அறிமுகமாகி நடித்துவந்தார்.
ஆனால் இவர் நடித்த எந்த படமும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றிபெறவில்லை. இதனால் தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புகள் குறைய தொடங்கியது. தற்போது சினிமா, சமூக வலைத்தளம் என பிசியாக இருந்துவரும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது. புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள், அவரா இது என கமெண்ட் செய்துவருகின்றனர்.