#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பிரம்மாண்டமாக நடந்த மறைந்த நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் மகன் பெயர் சூட்டுவிழா! என்ன பெயர் வைத்துள்ளனர் பார்த்தீர்களா!!
கன்னட சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் சிரஞ்சீவி சார்ஜா. அவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் மாரடைப்பால் காலமானார். அவரது திடீர் மரணம் ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. சிரஞ்சீவி சார்ஜாவின் மனைவி மேக்னாராஜ். அவரும் பிரபல நடிகை ஆவார்.
மேக்னா ராஜ் தமிழில் காதல் சொல்ல வந்தேன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர்.
கணவர் சிரஞ்சீவி சார்ஜா உயிரிழந்தபோது நடிகை மேக்னா ராஜ் 4 மாதம் கர்ப்பமாக இருந்தார். இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் அவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. சிரஞ்சீவி சார்ஜாவே மீண்டும் பிறந்ததாக குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் தற்போது குழந்தைக்கு மிகவும் பிரம்மாண்டமாக பெங்களூரில் பெயர் சூட்டு விழா நடைபெற்றுள்ளது. அந்த விழாவில் நஸ்ரியா கலந்து கொண்டார். குழந்தைக்கு ராயன் ராஜ் சார்ஜா என பெயர் வைத்துள்ளனர். இந்த நிலையில் நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை மேக்னாராஜ் நெகிழ்ச்சியுடன் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
பெயர் சூட்டு விழா நடைபெற்ற இடத்தில் சிரஞ்சீவியும் மேக்னாவும் ஒன்றாக இருப்பது போன்ற புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்தது. மேலும் பல பழைய வீடியோக்களும் ஒளிபரப்பப்பட்டது. இதனைக்கண்ட மேக்னா கணவரை எண்ணி கண்கலங்கியுள்ளார்.