மறைந்த தனது செல்லமகளுக்காக துயரத்திலும், பாடகி சித்ரா செய்த மாபெரும் நெகிழ்ச்சி செயல்!



chitra build cancer hospital in kerala

தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் 25 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி சாதனை படைத்தவர் பாடகி சித்ரா. இவரது கணவர் விஜயசங்கர். இவர்களுக்கு திருமணமாகி பல வருடங்களுக்கு பிறகு  பெண் குழந்தை பிறந்தது.  

நந்தனா என பெயரிட்ட ஆண்டு குழந்தையை மிகவும் சந்தோசமாக வளர்த்து வந்த நிலையில் கடந்த 2011–ம் ஆண்டு துபாயில்  நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்தார்.

 இது சித்ராவிற்கு மற்றும் அவரது ரசிகர்களுக்கு அது பெரிய துக்கத்தை ஏற்படுத்தியது. அதன்பிறகு சித்ரா தனது மகள் நினைவாக பல சமூக சேவைகளை செய்து வந்தார்.

     chitra

இந்நிலையில் தற்போது சித்ரா தனது மகள் நினைவாக கேரள மாநிலம் பருமுலாவில் உள்ள சர்வதேச புற்றுநோய் மைய மருத்துவமனையில்  கீமோ சிகிச்சை பிரிவை இலவசமாக  கட்டி கொடுத்து உள்ளார். 

இதன் தொடக்க விழாவில் சித்ரா கலந்து கொண்டு தனது மகள் பற்றி பேசும்போது கண் கலங்கி அழுதுள்ளார். பின்னர் இயேசு பாடலை பாடி பேச்சை முடித்துக்கொண்டார்.