#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்ட வழக்கில் புதிய திருப்பம்! முக்கிய நபர் அதிரடி கைது!
பல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்து மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் சித்ரா. அதனை தொடர்ந்து அவர் ஏராளமான சீரியல்களில் நடித்துள்ளார். மேலும் நடன ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்டுள்ளார். இந்த நிலையில் நடிகை சித்ரா தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர் தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது.
இந்த நிலையில் சித்ராவிற்கு கடந்த மாதம் ஹேமந்த் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இருவருக்கும் வரும் பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதற்கிடையில் இரு மாதங்களுக்கு முன்பு இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்நிலையில் சித்ரா ஷூட்டிங்கிற்கு சென்ற இடத்தில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து பிரேத பரிசோதனை அறிக்கையில் சித்ரா தற்கொலைதான் செய்து கொண்டார் என்பது உறுதியானது. பின்னர் போலீசார் 6 நாட்களாக இதுகுறித்து பல தரப்பினரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் தனது மகள் சித்ராவின் தற்கொலைக்கு ஹேம்நாத்தான் காரணம் என அவரது அம்மா ஆணித்தனமாக குற்றம் சாட்டிய நிலையில் அவரிடம் போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். அதில் ஹேம்நாத் அடிக்கடி சித்ராவை சந்தேகப்பட்டு அவரிடம் சண்டை போட்டுள்ளார் என்பதும், சித்ராவை தற்கொலைக்குத் தூண்டியது அவர்தான் என்பதும் உறுதி செய்யப்பட்டு அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.