பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
வாவ்! என்னவொரு ஜோடி! தனது வருங்கால கணவருடன் சித்ரா வெளியிட்ட அசத்தல் புகைப்படம்! குவியும் லைக்ஸுகள்!
பிரபல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக இருந்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் சித்ரா. அதனை தொடர்ந்து அவர் சில சீரியல்களில் நடித்துள்ளார். மேலும் நடன ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டுள்ளார். இந்த நிலையில் நடிகை சித்ரா தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர் தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த தொடரில் நடித்ததற்கு பிறகு இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உருவாகியுள்ளது. மேலும் கதிர் மற்றும் முல்லை ஜோடிக்காகவே அந்த சீரியல் பார்ப்பவர்களும் உண்டு.இந்த நிலையில் சித்ராவிற்கு கடந்த மாதம் ஹேமந்த் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் பிஸியாக இருக்கும் சித்ரா தற்போது தனது வருங்கால கணவருடன் எடுத்த புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் வைரலான நிலையில் லைக்குகளை அள்ளிவருகிறது.