#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கொரோனா அச்சுறுத்தல்: இனி தொலைக்காட்சிகளில் சீரியல்கள் ஒளிபரப்பாகுமா?
கொரோனா வைரஸ் தாக்கத்தால் வரும் 19-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை திரைப்படம், சின்னத்திரை, விளம்பர படப்பிடிப்பு அனைத்தும் நிறுத்தி படப்படிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் தெரிவித்துள்ளார்.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போதுபல நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது. உயிரைக் குடிக்கக்கூடிய இந்த கொடிய வைரசால் உலக நாடுகளில் இதுவரை 6500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
கொரோனா வைரஸ் தமிழகத்தில் பரவாமல் இருப்பதற்காக சுகாதாரத்துறை பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் சுகாதாரத்துறை கடும் தீவிரமாய் செயல்பட்டு வருகிறது. கொரோனா அச்சுறுத்தலால் ஆரம்பத்தில் இருந்து, தமிழகத்தின் அணைத்து விமான நிலையங்களிலும் உச்சகட்ட பாதுகாப்பு செய்பட்டு தீவிர கண்காணிப்பில் தமிழக சுகாதாரத்துறையினர் செயல்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் திரையரங்குகள், மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள், கேளிக்கை விடுதிகள், நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி மையங்கள், உயிரியல் பூங்காக்கள், பார்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் ஆகியவை 31.3.2020 வரை மூடப்பட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தநிலையில், படப்பிடிப்பு தளங்களில் சுகாதார பாதுகாப்பு குறைவாக இருப்பதால் தொழிலாளர்களின் நலன் கருதி தற்காலிகமாக திரைப்படம், சின்னத்திரை, விளம்பர படப்பிடிப்பு அனைத்தும் நிறுத்தி படப்படிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தொலைக்காட்சிகளில் சினிமாவை மிஞ்சும் அளவிற்கு சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றனர். முந்தய காலங்களில் வயதான பெண்கள் மட்டுமே சீரியல் பார்த்து வந்தனர். ஆனால் தற்போது இல்லத்தரசிகள், இளைஞர்கள், கல்லூரி மாணவ மாணவிகள் என அனைவரும் சீரியல் பார்க்க ஆரம்பித்துவிட்டனர். இந்தநிலையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சின்னத்திரை, விளம்பர படப்பிடிப்பு அனைத்தும் நிறுத்தி படப்படிப்பு நிறுத்தி வைக்கப்படவுள்ளதால் சில நாட்களுக்கு சீரியல் ஒளிபரப்ப சிக்கல் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.