ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய சிட்டிசன் பட நடிகை! அதிர்ச்சி புகைப்படம்!



Citizen movie actress vasunthara latest shocking photos

உலக நாயகன் கமல் நடிப்பில் கடந்த 2000ம் ஆண்டு வெளியான ஹேராம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் வசுந்தரா தாஸ். இவர் பிறந்து வளர்ந்தது எல்லாமே பெங்களூரில்தான்.

நடிப்பையும் தாண்டி பாட்டு பாடுவதிலும் திறைமையுள்ள இவர்  ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘முதல்வன்’படத்தில் ஷக்கலக்க பேபி என்ற பாடலையும் பாடியுள்ளார். அதன் பின்னர் ஹேராம் மற்றும் சிட்டிசன் ஆகிய இரண்டு படங்களில் மட்டுமே நடித்திருந்தார்.

இறுதியாக 2007 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான ‘ஏக் தஸ்தக்’  என்ற படத்தில் நடித்த இவர் அதன் பின்னர் டிரம்ஸ் கலைஞரான ரோபர்ட் நரேன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

குடும்ப வாழ்க்கையில் பிசியாக இருந்த வசுந்தராவின் தற்போதைய புகைப்படங்கள் எதுவும் வெளியாகாமல் இருந்த நிலையில் இவரது சமீபத்திய சில புகைப்படங்கள் வெளியாகி வைரலாகிவருகிறது. அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரா இது என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Ajith Kumar

Ajith Kumar