கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
போதையில் ஓரின சேர்க்கை... அரசு பணியாளரிடம் பணம் பறிப்பு.!! கல்லூரி மாணவர்கள் கைது.!!
நெல்லையில் அரசு பள்ளி உதவியாளராக பணிபுரியும் நபருடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட மாணவர்கள், அதனை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள 4 மாணவர்களும் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் மாணவர்களுடன் உல்லாசம்
திருநெல்வேலியில் உள்ள புதுமனை நகரை சேர்ந்தவர் பாலமுருகன். இவர் அரசு பள்ளியில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். மேலும் இவருக்கு பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்களுடன் பழக்கம் இருந்திருக்கிறது. இந்நிலையில் தனது பள்ளியின் முன்னாள் மாணவர்கள் 4 பேரை ஓரினச்சேர்க்கைக்கு அழைத்திருக்கிறார் பாலமுருகன். இதனைத் தொடர்ந்து 4 மாணவர்களும் பாலமுருகனுடன் சேர்ந்து மது அருந்தி உல்லாசமாக இருந்துள்ளனர்.
பணம் கேட்டு மிரட்டல்
இதன் பிறகு சில நாட்கள் கழித்து பாலமுருகனை தொடர்பு கொண்ட மாணவர்கள் தாங்கள் உல்லாசமாக இருந்ததை வீடியோ எடுத்து வைத்திருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் தாங்கள் கேட்கும் போது பணம் கொடுக்கவில்லை என்றால் வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவு செய்வதாக மிரட்டியுள்ளனர். இதனைத் தொடர்ந்து மாணவர்கள் கேட்ட தொகையை கொடுத்து வந்திருக்கிறார் பாலமுருகன். இதன் பிறகும் பாலமுருகனிடம் அடிக்கடி பணம் கேட்டு மாணவர்கள் தொந்தரவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: "நம்ம புள்ளய கொன்னவன் கூட கள்ள தொடர்பு கேக்குதோ..." காதலனுக்கு அரிவாள் வெட்டு.!! அண்ணன், கணவன் கைது.!!
காவல்துறையில் புகார்
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பாலமுருகன் இது தொடர்பாக காவல்துறையில் புகார் செய்தார். அவரது புகாரின் அடிப்படையில் விசாரணையில் இறங்கிய காவல்துறையினர் 4 மாணவர்களையும் கைது செய்து விசாரித்ததில் உண்மையை ஒப்புக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர். மேலும் அவர்களது செல்போன்களும் கைப்பற்றப்பட்டு ஆய்விற்கு அனுப்பப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க: கள்ள தொடர்பு.. கணவன், குழந்தை கொலை.!! பெண்ணுக்கு இரட்டை ஆயுள் தண்டனை.!! காதலன் ரிலீஸ்.!!