#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஸ்ரீ ரெட்டி லிஸ்ட்ல என்பெயர் மிஸ் ஆயிடுச்சு! வான்டடாக சிக்கும் தமிழ் நடிகர்!
நடிகர்கள், இயக்குனர்கள் என பலபேர் தனக்கு வாய்ப்பு தருவதாக கூறி தன்னை ஏமாற்றிவிட்டனர் என அரை நிருவாண போராட்டம் நடத்தியவர் நடிகை ஸ்ரீ ரெட்டி. இந்த பிரச்சனை தொடர்பாக சென்னை வந்துள்ள நடிகை ஸ்ரீ ரெட்டி ஒவொரு தொலைக்காட்சி படியாக ஏறி இறங்கி வருகிறார்.
இந்நிலையில், நடிக்க வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றால், படுக்கையை பகிர வேண்டும் என தனக்கு அழைப்பு விடுப்பதாகவும், கடந்த ஐந்து ஆண்டு காலமாக இந்த நெருக்கடியை தான் சந்தித்து வருவதாகவும் நடிகை ஸ்ரீ ரெட்டி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அந்த வரிசையில் கோலிவுட்டில் இடம் பிடித்த முக்கிய நட்சத்திரங்கள்....இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், இயக்குனர் லாரன்ஸ், நடிகர் ஸ்ரீகாந்த், இயக்குனர் சுந்தர் சி என பட்டியல் நீண்டுக்கொண்டே செல்கிறது என கூறலாம்..
எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல், வேண்டும் என்றே ஸ்ரீ ரெட்டி இவ்வாறு செய்வதாக பல்வேறு தரப்பினர் புகார் தெரிவித்து வருகின்றனர். மேலும் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பது பற்றி நடிகர்சங்கம் ஆலோசித்துவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து காமெடி நடிகர் ரமேஷ் கண்ணா, பிரபல இதழுக்கு பேட்டி அளிக்கும் போது, ஸ்ரீ ரெட்டி லிஸ்டில் நான் வரவில்லையே...அப்படி என் பெயர் போட்டு இருந்தால் கொஞ்சம் பிரபலம் அடைந்து இருப்பேன் என வருத்தமாகவும் கிண்டலாகவும் தெரிவித்து உள்ளார்....
பாலியல் தொல்லை என்பது அவ்வளவு ஈசியாக எல்லோருக்கும் எல்லா சமயத்திலும் நடப்பது இல்லை...இந்த அம்மா என்னவோ அவர்கள் இஷ்டத்துக்கு பதிவு செய்து வருகிறார்கள்.... ஏ.ஆர் முருகதாஸ் எவ்வளவு பெரிய இயக்குனர் அவர் பெயர் எல்லாம் வெளியிட்டு, இவர் இப்படி செய்து வருகிறார் என நடிகர் ரமேஷ் கண்ணா தெரிவித்து உள்ளார்.