#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நடிகை பானுபிரியாவுக்கு மீண்டும் வந்த சோதனை! கைது செய்யப்படுவாரா??
பிரபல நடிகை பானு பிரியா தனது வீட்டில் பணியாற்றும் சிறுமி மற்றும் தாய் பிரபாவதி ஆகியோர் வீட்டிலிருந்து 10 பவுன் நகை, ஒரு லட்ச ரூபாய் பணத்தை திருடியதாகப் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து விசாரணை மேற்கொண்டபோது, தனது மகள் பணத்தை திருடி தன்னிடம் தந்ததாகச் சிறுமியின் தாயார் ஒப்புக்கொண்டதையடுத்து தாய், மகள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
இதனையடுத்து சிறுமியின் தாய் புழல் சிறையிலும், சிறுமி சென்னை சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்திலும் அடைக்கப்பட்டனர். இந்தநிலையில் இந்த விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. தனது 14 வயது மகளை வீட்டு வேலைக்கு அமர்த்தி, பானுபிரியா மற்றும் அவரது கணவர் சித்ரவதை செய்ததாக சிறுமியின் தாய் ஆந்திர போலீஸாரிடம் புகார் வகித்திருந்தார்.
அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய ஆந்திர போலீஸார், பானுப்பிரியா மற்றும் அவரது கணவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் பானுபிரியா சென்னையில் வசிப்பதால், அந்த வழக்கின் கோப்பினை தற்போது சென்னை போலீஸாருக்கு அனுப்பியுள்ளனர்.
இதனையடுத்து சென்னை போலீஸார், பானுபிரியா மற்றும் அவரது கணவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதன்படி, காயம் ஏற்படுத்துதல், சிறைவைத்தல் உள்ளிட்ட பல குற்றங்கள் செய்ததாக சிறார் நீதி குழந்தையின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.