#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நடிகர் தம்பி ராமையா, அவரது மகன் உமாபதி மீது அதிரடி புகார்.! நடந்தது என்ன? இதுதான் காரணமா??
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகர் தம்பி ராமையா. அவர் மற்றும் அவரது மகன் உமாபதி நடிப்பில் உருவான திரைப்படம் தண்ணி வண்டி. இந்த படம் ரிலீசாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தண்ணி வண்டி படத்தின் தயாரிப்பாளர் சரவணன், தம்பி ராமையா மீதும் அவரது மகன் உமாபதி மீதும் அதிரடி புகார் அளித்துள்ளார்.
அவர் அளித்த புகாரில், நான் 2015ல் படம் தயாரிக்க திட்டமிட்ட போது, தம்பி ராமையா அவரது மகன் உமாபதியை ஹீரோவாக்க என்னை அணுகினார். மேலும் படத்தின் விளம்பரத்திற்கான அனைத்து பொறுப்புகளையும் தானே ஏற்றுக் கொள்வதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில் கடந்த 2020ல் அவரை வைத்து தண்ணி வண்டி என்ற படத்தை எடுத்தேன்.
இந்நிலையில் அந்த படத்தை புரமோஷன் செய்வதற்கும், ரிலீஸ் செய்தபோதும் நான் பலமுறை அழைத்தும் தம்பி ராமையா மற்றும் அவரது மகன் உமாபதி யாரும் வரவில்லை. அவர்கள் விளம்பரம் செய்து இருந்தால் படம் நன்றாக ஓடியிருக்கும். அவர்களால் எனக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அவர்கள் நஷ்ட ஈடாக எனக்கு 4 கோடி வழங்க வேண்டும் தவறினால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் எனக் கூறியுள்ளார்.