கான்ஜுரிங் கண்ணப்பன் படத்தின் வெற்றி; இயக்குனருக்கு பிறந்தநாள் பரிசு கொடுத்து இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திய சதிஷ்.!



  Conjuring Kannappan Director Gets Gift From Actor Sathish 

 

கடந்த டிசம்பர் 08ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் கான்ஜுரிங் கண்ணப்பன். நடிகர்கள் சதிஷ், ரெஜினா, நாசர், ஆனந்தராஜ், சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி உட்பட பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர். 

ஏஜிஎஸ் என்டர்டைன்மெண்ட் தயாரிப்பில், செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில், யுவா ஒளிப்பதிவில், பிரதீப் எடிட்டிங்கில் படம் உருவாகி இருந்தது. பேய் கதையை மையப்படுத்தி உருவான திரைப்படம், நல்ல வெற்றியை அடைந்தது. 

cinema news

இந்நிலையில், படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி அடைந்துள்ள காரணத்தாலும், இன்று இயக்குனர் சேவியரின் பிறந்தநாள் என்பதாலும், அவருக்கு நடிகர் சதிஷ் விலையுயர்ந்த எம்போரியோ அர்மானி வாட்சை பரிசாக வழங்கினார்.