#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அஜித்தை தகாத வார்த்தைகளால் திட்டிய இயக்குநர் பாலா.? என்ன நடந்தது தெரியுமா.!
தமிழில் "அமராவதி" படத்தின் மூலம் அறிமுகமாகி, காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்க்களம், தீனா, பூவெல்லாம் உன் வாசம், கண்டுகொண்டேன், கிரீடம், பில்லா, அசல், அமர்க்களம், மங்காத்தா, அட்டகாசம், பில்லா 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
அல்டிமேட் ஸ்டார் மற்றும் ஏ கே என்று ரசிகர்களால் அழைக்கப்படும் அஜித், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ளார். அதே போல் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான பாலா, சேது திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்.
பாலாவின் படத்தில் நடித்தபிறகு தான் விக்ரம், சூர்யா, ஆர்யா என்று பல முன்னணி நடிகர்களுக்கும் திரைப்பயணம் ஏறுமுகமானது. விக்ரமுக்கு சேது, சூர்யாவுக்கு நந்தா, மற்றும் ஆர்யாவுக்கு நான் கடவுள் ஆகிய படங்கள் திரைத்துறையில் ஏற்றம் கொண்டு வந்தன.
இந்நிலையில், நான் கடவுள் படத்தில் அஜித் நடிக்க இருந்ததாகவும், அதற்காக அஜித் நீண்ட முடி வளர்த்ததாகவும், ஆனால் கதையை முழுவதுமாக கூறாமல் படபிடிப்பை ஆரம்பிக்காமல் அஜித்தை அலைகழித்ததால் பாலாவிற்கும் அஜித்திற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து பாலா கதை விவாதத்தில் இருந்த அவரது நண்பர்கள் அஜித்தின் முதுகில் அடித்து அசிங்கப்படுத்தியதால் அஜித் படத்தில் நடிக்காமல் விலகியதாகவும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.