உலகநாயகன் கிரிக்கெட் விளையாடி பார்த்துருக்கீங்களா.! வைரலாகும் புகைப்படத்தால் குஷியான ரசிகர்கள்!!



cricket-batting-image-viral

தமிழ் சினிமாவில் களத்தூர் கண்ணம்மா என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகர் கமல்ஹாசன். அதனை தொடர்ந்து அவர் அபூர்வ ராகங்கள் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.பின்னர்  மூன்றாம் பிறை, நாயகன், இந்தியன், மூன்று முடிச்சு, 16 வயதினிலே, சிவப்பு ரோஜாக்கள் என ஏராளமான பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

மேலும் கமல் ஹே ராம், விருமாண்டி,விஸ்வரூபம், தசாவதாரம் ஆகிய திரைப்படங்களை அவரே தயாரித்து நடித்துள்ளார். இந்நிலையில் உலக நாயகன் என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட கமல் கலைமாமணி, பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருது என பல விருதுகளை பெற்றுள்ளார்.

kamal

 இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது கமல் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியின் தலைவராக, தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் உலக நாயகன் கமல் கிரிக்கெட் பேட்டுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 1989ஆம் ஆண்டு நடிகர் சங்கம், நிதி திரட்டுவதற்காக நட்சத்திர கிரிக்கெட் தொடர் ஒன்றை ஏற்பாடு செய்து இருந்தது. அதில் சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் கமல் பங்கேற்று விளையாடி உள்ளனர். அப்பொழுது  நடிகர் கமல் சில பந்துகளுக்கும் பேட்டிங் செய்திருந்தார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

kamal