#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் விஜய் சேதுபதியின் தீவிர ரசிகரா? புகைப்படத்தை பாருங்க புரியும்.!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் தனது அபார ஆட்டத்தால் இந்திய அணி வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தவர் தமிழக வீரர் விஜய் சங்கர்.
பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் பட்டையை கிளப்பிய அவர் ஆஸ்திரேலியாவுடனான தொடரில் தனது முழு திறமையையும் வெளிப்படுத்தி வெற்றியை இந்தியாவிற்கு நிலைநாட்டினார்.
அதனை தொடர்ந்து தமிழக ஒருநாள் போட்டிக்கான அணியின் கேப்டனாக இருந்த விஜய் ஷங்கர், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் அணிக்காக தேர்வு செய்யப்பட்டார். மேலும் உலக கோப்பை இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படுவார் எனவும் ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இதை தொடர்ந்து விஜய் சங்கர் தற்போது நடைபெற உள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாட உள்ளார்.
Happy to meet Makkal Selvan @VijaySethuOffl #FanBoyMoment pic.twitter.com/lPmnVW2rIN
— Vijay Shankar (@vijayshankar260) 16 March 2019
பிரபல கிரிக்கெட் வீரர் விஜய் சங்கர் முன்னணி நடிகரான விஜய் சேதுபதியின் தீவிர ரசிகர் ஆவார். இவர் சமீபத்தில் விஜய் சேதுபதியை சந்தித்துள்ளார். மேலும் அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் மக்கள் செல்வத்தை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி, இது ஃபேன்பாய் மொமண்ட் என பதிவிட்டுள்ளார்.
இதை கண்ட இருவரது ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர்.