#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவீங்களா? ரசிகரின் கேள்விக்கு புலம்பி தள்ளிய பிரபல இளம் நடிகை!! இதுதான் காரணமா??
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் கேமராக்கள் முழுவதும் பொருத்தப்பட்ட ஒரே வீட்டிற்குள் 100 நாட்கள், 16 பிரபலங்கள் தொலைக்காட்சி, மொபைல் போன்ற வெளி உலக தொடர்பும் இல்லாமல் இருக்க வேண்டும் இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல் தொகுத்து வழங்கி வந்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏற்கனவே முதல் இரண்டு சீசன்கள் முடிந்த நிலையில் தற்போது மூன்றாவது சீசன் தொடங்குவதற்காகன பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. .இந்த நிகழ்ச்சியையும் நடிகர் கமலே தொகுத்து வழங்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
மேலும் நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்கள் குறித்த தகவலும் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கிறது. அதனை தொடர்ந்து ஜூன் 23 ஆம் தேதி பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்க உள்ளதாகவும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது.
இந்நிலையில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் mr .லோக்கல் ஆகிய படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்த ஷாலு சம்மு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களிடம் லைவ் சாட் செய்தபொழுது ரசிகர் ஒருவர் பிக்பாஸ் நிகழ்ச்சிகாவது வருவீங்களா? நாங்கள் ஆர்மி ஓபன் பண்ணலாமா? என கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்நிலையில் அதற்கு ஷாலு சம்மு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க நிறைய தகுதிகள் வேண்டும் என எதிர்பார்க்கின்றனர் அது எனக்கு இல்லை எனவும் பல மக்கள் கூறி வருகின்றனர். மேலும் சமீபத்தில் விமர்சகர் ஒருவர் நான் நடிகை என்று கூறிக் கொள்வதற்கு கூட தகுதி இல்லாதவர் என்று கூறியுள்ளார் என மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.