#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வனிதாவின் மூன்றாவது கணவர் இவர்தானா? தங்கள் உறவு குறித்த உண்மையை போட்டுடைத்த பிரபல நடன இயக்குனர்!!
பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த இரண்டு வருடங்களாக நடத்தப்பட்ட பிக்பாஸ் போட்டியின் மூன்றாவது சீசன் சமீபத்தில் துவங்கி மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனையும் நடிகர் கமலே மூன்றாவது முறையாக தொகுத்து வழங்கி வருகிறார்.
மேலும் இரண்டு வாரங்கள் பரபரப்பாக முடிந்துள்ள நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு செய்திவாசிப்பாளர் பாத்திமாபாபு முதல் ஆளாக வெளியேறினார். மொத்தம் 16 பிரபலங்கள் போட்டியாளர் பங்கேற்றுள்ள இந்தநிகழ்ச்சியில் பிரபல நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதாவும் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். அவர் ஆரம்பத்தில் இருந்தே சக போட்டியாளர்களிடம் கடுமையாக பேசிவருகிறார். மேலும் இவர் அபிராமி அய்யர், சாக்ஷி அகர்வால், ரேஷ்மா போன்றவர்களிடம் மட்டும் நட்பு பாராட்டி பிறரிடம் மிகவும் மோசமாக நடந்துகொள்கிறார். இவ்வாறு அவர் பார்வையாளர்களுக்கு வில்லி போல காட்சியளிக்கிறார்.
அதுமட்டுமின்றி இவர் தனது இரண்டாவது கணவரின் மகளை கடத்தி வந்ததாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் அவரிடம் பிக்பாஸ் வீட்டிலேயே விசாரணையும் நடைபெற்றது. இந்நிலையில் வனிதாவின் மூன்றாவது கணவர் நடன இயக்குனர் ராபர்ட் என தகவல் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இந்த நிலையில் தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த ராபர்ட் இந்த தொடர்பு குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அதாவது அவர் கூறுகையில் வனிதாவுக்கு எப்பொழுதுமே பப்ளிசிட்டி என்பது மிகவும் பிடிக்கும். நான் அவரது தயாரிப்பில் உருவான திரைப்படத்தில் பணிபுரிந்தபோது நாங்கள் இருவரும் சேர்ந்தாற்போல நிறைய ஸ்டில்கள் எடுக்கப்பட்டது. மேலும் அவை படத்திற்காகத்தான் என்று நான் எதுவும் கூறவில்லை.
அதனை தொடர்ந்து எங்களது உறவு குறித்து பேட்டி ஒன்றில் வனிதாவிடம் கேட்ட போது ,அவர் இருவருக்கும் உறவு உள்ளது போல பதிலளித்தார். அதனை கண்டு அதிர்ச்சியடைந்த நான் இதுகுறித்து வனிதாவிடம் கேட்டபோது படத்தின் புரமோஷனுக்கு இதெல்லாம் தேவை. அப்பொழுதான் மக்கள் தியேட்டருக்கு வருவார்கள். கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க என கூறினார். மற்றபடி எங்களுக்கு இடையே வேறு எந்த உறவும் இல்லை, நட்பும் இல்லை என நடன இயக்குனர் ராபர்ட் கூறியுள்ளார்.