#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நான் அவருக்கு கணவர் இல்லை, ஆனால் நானும் அவரும் ... வனிதாவின் தொடர்பால் புதிய சர்ச்சை.!
நடிகர் விஜயக்குமாரின் மகள் வனிதா விஜயகுமாரின் வீட்டை அபகரிக்க நினைப்பதாகவும் வீட்டை விட்டு வெளியேற மறுப்பதாகவும் ,விஜயகுமார் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வனிதாவை அங்கிருந்து வெளியேற்றினார்கள் .
இதனால் ஒவ்வொரு ஊடகங்களாக சந்தித்து தனக்கு நேர்ந்த அநியாயம் குறித்தும்,தனது குடும்பத்தை பற்றியும் வனிதா பேட்டி அளித்து வருகிறார்.
மேலும் வனிதா முதலாவதாக டிவி நடிகர் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்பு இருவரும் பிரிந்த நிலையில் இரண்டாவதாக தொழிலதிபர் ஆனந்தராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை உள்ள நிலையில் இருவரும் பிரிந்தனர்.
பின்னர் மூன்றாவதாக நடன இயக்குனர் ராபர்ட் என்பவரை மணந்தார் என செய்திகள் வெளியானது .மேலும் விஜயகுமார் வீட்டை விட்டு துரத்திவிட்டதால் தற்போது இவர் ராபர்ட்டுடன் வசிப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த செய்தியை ராபர்ட் மறுத்துள்ளார்.மேலும் எனக்கும் வனிதாவுக்கும் எந்த ஒரு நெருக்கமும் கிடையாது. எனக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.
அவருடன் என்னை இணைந்து பேசப்படுவது என குடும்பத்தினரை பாதித்துள்ளது. இதனால் மனவேதனையில் இருக்கிறேன். அவருடன் நான் ஒரு திரைப்படத்தில் மட்டுமே பணிபுரிகிறேன், இது தவிர எங்கள் இருவருக்கும் வேறு ஒன்றும் கிடையாது என கூறியுள்ளார்.