சிம்பிளாக நடந்து முடிந்த பிக்பாஸ் பிரதீப் திருமணம்.! பொண்ணு யார் தெரியுமா?? வைரலாகும் புகைப்படம்.!
இதுல துளி கூட அரசியல் கிடையாது! அதுமாதிரியான காட்சியும் கிடையாது! அதிரடியாக விளக்கமளித்த 800 படக்குழு!
இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை படமான 800ல் விஜய் சேதுபதி நடிக்கிறார். இப்படத்தை ஸ்ரீபதி என்பவர் இயக்குகிறார். முத்தையா முரளிதரன் இலங்கை அரசுக்கு ஆதரவானவர் எனவே இப்படத்தில் விஜய்சேதுபதி நடிக்க கூடாது என பல அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில் இதுகுறித்து பட தயாரிப்பு குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றில் விஜய் சேதுபதி நடிக்கும் 800 திரைப்படம் அரசியல் ஆக்கப்பட்டு வருகிறது. இது முழுக்க ஒரு கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை சம்பந்தப்பட்ட படமே தவிர, இதில் எந்தவித அரசியலும் கிடையாது. தமிழகத்தில் இருந்து தேயிலை தோட்ட கூலியாளராக இலங்கைக்கு குடிபெயர்ந்த ஒரு சமூகத்திலிருந்து வந்த முரளிதரன், எப்படி பல தடைகளை தாண்டி உலகளவில் சிறந்த பந்து வீச்சாளராக உயர்ந்தார் என்பதுதான் இப்படத்தின் கதை.
Press Release! #800TheMovie pic.twitter.com/d0BMYETRi6
— Movie Train Motion Pictures (@MovieTrainMP) October 14, 2020
இந்த படம் இளைய சமுதாயத்திற்கும், வருங்கால விளையாட்டு வீரர்களுக்கும் தங்கள் வாழ்க்கை பயணத்தில் எவ்வளவு தடைகள் வந்தாலும் அதனை கடந்து சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் படமாக இருக்கும். இந்த படத்தில் ஈழத் தமிழர்களின் போராட்டத்தை சிறுமைப்படுத்தும் காட்சிகள் கிடையாது.மேலும் இத்திரைப்படத்தில் கூடுதலாக இலங்கையை சேர்ந்த பல தமிழ் திரைத்துறை கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பங்கு பெறுகின்றனர்.
இதன்மூலம் இலங்கை தமிழ் திரைத்துறை கலைஞர்களுக்கு தங்களது திறமை உலக அரங்கில் வெளிகாட்ட இந்த படம் நிச்சயம் அடித்தளமிட்டு தரும். கலைக்கும், கலைஞர்களுக்கும் எல்லை கிடையாது. எல்லையை கடந்து மக்களையும் மனிதத்தையும் இணைப்பது கலை. நாங்கள் அன்பையும் நம்பிக்கையும் மட்டுமே விதைக்க விரும்புகிறோம் என கூறியுள்ளார்.