#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
புஷ்பான்னா ஃபளவர்னு நினைச்சீங்களா? ஃபயரு.. மகளுடன் கெத்து காட்டும் பிரபல கிரிக்கெட் வீரர்! இணையத்தை கலக்கும் வீடியோ!!
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்து மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று ஹிட்டாகி வரும் திரைப்படம் புஷ்பா. செம்மரக் கடத்தலை மையமாக கொண்டு இரண்டு பாகமாக உருவாகும் இந்தப்படத்தில் பகத் பாசில், ராஷ்மிகா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இதில் சமந்தா ஒரு பாடலுக்கு கவர்ச்சி குத்தாட்டம் போட்டுள்ளார்.
புஷ்பா திரைப்படம் டிசம்பர் 17-ஆம் தேதி தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் 300 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்துள்ளது. மேலும் இப்படத்தின் மூலம் அனைத்து மொழிகளிலும் அல்லு அர்ஜுனுக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகியுள்ளனர். மேலும் புஷ்பா இரண்டாம் பாகத்திற்காக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்த படத்தில் இடம் பெற்ற பாடல்கள் மற்றும் சில டயலாக்குகள் பெருமளவில் ஹிட்டடித்த நிலையில் திரைப் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் அதற்கு டப்ஸ்மாஷ் செய்து வீடியோ வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தனது மகளுடன் புஷ்பா படத்தின் பேமஸ் டயலாக்கான "புஷ்பான்னா ஃப்ளவர்னு நினைச்சீங்களா? ஃபயரு" என ஆக்ஷனுடன் பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். அது வைரலான நிலையில் பலரும் லைக்ஸ்களை குவித்துள்ளனர்.