#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வரும் தீபாவளிக்கு சன் டிவியில் என்ன படம் தெரியுமா?? TRP எகிற போகுது!!
வரும் வியாழன் தீபாவளி தினத்தன்று புத்தம் புது மெகாஹிட் திரைப்படத்தை ஒளிபரப்பவுள்ளது சன் டிவி.
தீபாவளி என்றாலே புத்தாடை, பட்டாசு, பலகாரம் அதனுடன் சேர்த்து புதுப்படம் என அந்த நாள் முழுவதும் செம ஜாலியாக இருக்கும். தற்போதைய காலகட்டத்தில் மல்டிப்ளெக்ஸ் திரையரங்குகள், அமேசான் ப்ரைம், ஹாட்ஸ்டார் என புது படங்களை அன்றே பார்த்துவிடுகிறோம்.
ஆனால் முன்பெல்லாம் புது படத்தை எப்போடா டிவியில் போடுவார்கள் என காத்திருந்த காலமும் உண்டு. அதுவும் தீபாவளி, புத்தாண்டு, பொங்கல் என்றால் எந்த தொலைக்காட்சியில் எந்த திரைப்படம் போடுவார்கள் என்று ஒரு வாரத்திற்கு முன்பே காத்திருப்போம்.
ஆனால் இப்பொது பண்டிகை தின புது படத்திற்கெல்லாம் மவுசு சற்று குறைந்துவிட்டது என்றே கூறலாம். இந்நிலையில் ரசிகர்களை தங்கள் பக்கம் இழுக்க தொலைக்காட்சிகளும் புது புது படங்களை ஒளிபரப்பிவருகிறது. அந்த வகையில், வரும் தீபாவளி அன்று புத்தம் புது திரைப்படம் ஒன்றை ஒளிபரப்பவுள்ளது சன் டிவி.
ஆம், நடிகர் சிவகார்த்திர்க்கேயன் நடிப்பில் உருவாகி, திரையரங்குகளில் வெற்றிநடைபோட்டுக்கொண்டிருக்கும் "டாக்டர்" திரைப்படத்தை தீபாவளி தின சிறப்பு திரைப்படமாக ஒளிபரப்பவுள்ளது சன் டிவி. தீபாவளி நாளான வரும் வியாழன் அன்று மாலை 6.30 மணிக்கு டாக்டர் திரைப்படத்தை உங்கள் சன் டிவியில் கண்டு மகிழுங்கள்.