#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தீபாவளிக்கு சன் டீவியில் என்ன படம் தெரியுமா? சூப்பர் ஹிட் படத்தை ஒளிபரப்பும் சன் டிவி.
பொதுவாக பண்டிகை நாட்கள் என்றாலே புது திரைப்படங்கள் வெளியாவது வழக்கம். அதேபோல திரையில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றபடங்களை பண்டிகை காலங்களில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்வதும் வழக்கமாக நடந்துவருகிறது.
இந்நிலையில் வரும் ஞாயிறு அன்று தீபவளி பண்டிகை வருவதை ஒட்டி பிகில், கைதி போன்ற படங்கள் வெளியாக உள்ளது. அதேநேரத்தில் மக்கள் பெரிதும் எதிர்பார்க்கும் சன் தொலைக்காட்சியில் தீபவளியை முன்னிட்டு மூன்று படங்கள் ஒளிபரப்பாக உள்ளது.
ஞாயிறு மதியம் 12 மணிக்கு விஜய் நடித்த பைரவா படமும், மாலை நான்கு மணிக்கு சந்தானம் நடித்த A1 படமும் திரையிடப்பட உள்ளது. மாலை 6 மணிக்கு ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற காஞ்சனா 3 படம் திரையிடப்பட உள்ளது.