#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ரொமான்ஸ், பீச் ட்ரஸ்ஸில் ஆட்டம், பாட்டமாக கொண்டாடும் ஹிருத்திக் ரோஷன் - தீபிகா படுகோன்: பைட்டர் படத்தின் அடுத்த அப்டேட்.!
சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், நடிகர்கள் ஹிருத்திக் ரோஷன், தீபிகா படுகோன், அணில் கபூர், கரண் சிங் ரோவர், அக்ஷய் ஓபராய், அமீர் நாயக் உட்பட பலர் நடித்து இருக்கும் திரைப்படம் பைட்டர்.
ரூ.250 கோடி செலவில் தயாராகியுள்ள பைட்டர் திரைப்படம், ஜனவரி 25, 2024 அன்று உலகளவில் திரைக்கு வருகிறது. சஞ்சித் பல்ஹாரா மற்றும் அங்கித் ஆகியோர் படத்திற்கு இசையமைத்து இருக்கின்றனர்.
தற்போது படத்தின் வெளியீடு பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகின்றன. கடந்த 2022ம் ஆண்டு படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், கொரோனா காரணமாக தள்ளிப்போன படங்களில் பைட்டரும் ஒன்று ஆகும்.
டைகர், பதான் படத்தை தொடர்ந்து சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பைட்டர் படம் வெளியாவது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்நிலையில், படத்தில் இடம்பெற்றுள்ள Ishq Jaisa Kuch பாடல் காட்சியின் ப்ரமோ வெளியாகி இருக்கிறது. படத்தின் ஒட்டுமொத்த பாடல் காட்சியும் திரையரங்கில் மட்டுமே வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.