#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பிரபல சன் டிவி சீரியல் நடிகைக்கு அடிச்சது அதிர்ஷ்டம்.! என்ன விஷயம் தெரியுமா?
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தெய்வமகள் தொடர் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை வாணி போஜன். தெய்வமகள் தொடர் இவரை தமிழகம் முழுவதும் பிரபலமாக்கியது. இவருக்காகவே அந்த தொடரை பார்த்த இளைஞர்கள் ஏராளம்.
தெய்வமகள் தொடர் நிறைவு பெற்றதை அடுத்து விஜய் தொலைக்காட்சியில் ஜூனியர் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றுவந்தார் வாணி போஜன். சீரியலை தாண்டி எப்படியாவது சினிமாவிலும் நடித்துவிடவேண்டும் என்று முயற்சித்த வாணிபோஜனுக்கு தற்போது அந்த அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது.
நடிகர் நிதின் சத்யா தயாரிக்க உள்ள புது படத்திற்கு பிரபல நடிகை வைபவுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார் நடிகை வாணி போஜன். இதுதான் அவரது முதல் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.