#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தனக்கு நடக்க இருப்பதை முன்கூட்டியே கணித்தாரா மாரிமுத்து.? வைரலாகும் வீடியோ.!
தமிழ் சினிமாவிலும் சின்னத்திரையிலும் இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வந்த மாரிமுத்து இன்று காலை திடீரென மாரடைப்பால் காலமானார். அவரது மரணம் திரையுலகினர் மற்றும் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இன்று காலை வடபழனியில் டப்பிங் பேச சென்றவர் மூச்சு திணறல் இருப்பதாக கூறி மருத்துவமனைக்கு சென்றார். அங்கு வைத்து அவர் உயிர் பிரிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கவிஞர் வைரமுத்துவிடம் உதவியாளராக தனது திரையுலக பணியை தொடங்கிய மாரிமுத்து இயக்குனர் வசந்த் , சீமான். மணிரத்தினம் மற்றும் எஸ்ஜே சூர்யா ஆகியோருடனும் பணியாற்றி இருக்கிறார்.
இவரது இயக்கத்தில் வெளியான கண்ணும் கண்ணும் மற்றும் புலிவால் ஆகிய இரண்டு திரைப்படங்கள் பொருளாதார ரீதியாக மிகப்பெரிய வெற்றியடையவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றது. இதனைத் தொடர்ந்து சினிமாவில் குணச்சித்திர நடிகராக தன்னுடைய பயணத்தை தொடர்ந்த இவர் யுத்தம் செய், பரியேறும் பெருமாள், ஜெயிலர் போன்ற திரைப்படங்களிலும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். உலக நாயகன் கமல்ஹாசனின் இந்தியன் 2 திரைப்படத்திலும் இவர் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
💔💔#RIPMarimuthu pic.twitter.com/uQ1T2AREj3
— RamKumarr (@ramk8060) September 8, 2023
இவரது மரணத்திற்கு பலரும் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் இவர் எதிர்நீச்சல் தொடரில் பேசிய வசனம் ஒன்று தற்போது வைரலாகி இருக்கிறது. அதில் தனக்கு அடிக்கடி நெஞ்சு வலிப்பதாகவும் அது மனதின் வலியா அல்லது நெஞ்சு வலியா தெரியவில்லை என்றும் ஏதோ கெட்டது நடக்கப் போவது தெரிகிறது என பேசி இருப்பார். அந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது. அவர் தனக்கு நடக்க இருப்பதை முன்கூட்டியே அறிந்து அப்படி பேசி இருப்பாரோ என மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.