#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
படமாகிறது சூப்பர் ஸ்டாரின் வாழ்க்கை வரலாறு! ரஜினியாக நடிக்கப்போவது யார் தெரியுமா? வெளியான சூப்பர் தகவல்!
சமீபகாலமாக சினிமா துறையில் அரசியல் தலைவர்கள், நடிகர் நடிகைகள் மற்றும் சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாறு சினிமாவாக தயாராகி வருகிறது. மேலும் தற்போது கூட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு ஏ.எல். விஜய் இயக்கத்தில் தலைவி என்ற பெயரில் உருவாகி வருகிறது.
இந்நிலையில் இயக்குனர் லிங்குசாமி நடிகர் ரஜினியின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க முயற்சி செய்து வருகிறார். இவர் ரன், சண்டக்கோழி, பீமா, பையா உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இதுவரை நான் வாழ்க்கை கதைகளை படமாக எடுக்கவில்லை. ஆனால் ரஜினிகாந்த் வாழ்க்கையை சினிமாவாக எடுக்க ஆசை. அதற்கான முயற்சியை செய்து வருகிறேன். அவரது வாழ்க்கையை படமாக்கினால் மக்களுக்கு நிறைய நல்ல விஷயங்கள் தெரியவரும். முன்னேறத் துடிக்கும் இளைஞர்களுக்கு முன்மாதிரியாக இருக்கும் என கூறியுள்ளார்.
மேலும் ரஜினியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ரஜினி கதாபாத்திரத்தில் அவரது மருமகன் தனுஷ் நடிக்கவிருப்பதாகவும், அவரிடம் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.