#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இதுவரை யாரும் பார்த்திராத நடிகர் தனுஷின் சிறுவயது புகைப்படங்கள்! தீயாய் பரவும் புகைப்படங்கள்
தனுஷ் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்வருகிறார். செல்வராகவனின் இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமையில் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான காதல் கொண்டேன் திரைப்படம் ஒரு வெற்றிப்படமாக அமைந்தது.
இத்திரைப்படத்தின் மூலமாக, தனுஷ் ஒரு சிறந்த நடிகர் என்ற பாராட்டையும் பெற்றார். இதன் பிறகு வெளியான திருடா திருடி மற்றும் தேவதையைக் கண்டேன் போன்ற திரைப்படங்களின் மூலமாக தனது திரையுலக செல்வாக்கை நிலைநிறுத்திக் கொண்டார். இவர் ஆடுகளம் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக 2011ல் சிறந்த நடிகருக்கான இந்திய தேசிய விருதைப் பெற்றார்.
3 என்ற தமிழ் திரைப்படத்திற்காக 2011 ஆம் ஆண்டு இறுதியில் இவர் பாடிய வொய் திஸ் கொலவெறி டி என்ற பாடல் யூடியூப் இணையதளத்தில் வெளியாகி சில மணி நேரங்களிலேயே அதிகம் பேரால் பார்வையிடப்பட்டதால் ஓரிரு நாட்களில் தேசிய அளவில் பேசப்பட்டார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான அசுரன் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் தற்போது நடிகர் தனுஷின் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலை ஏற்படுத்தி வருகிறது.