#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
களைக்கட்டிய பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடிகர் தனுஷ்! அதுவும் யாருக்கு தெரியுமா? வைரலாகும் புகைப்படங்கள்!!
இயக்குனர் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் செல்வராகவனின் சகோதரனும், நடிகருமான தனுஷ் கலந்துகொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான காதல் கொண்டேன்,மயக்கம் என்ன,7ஜி ரெயின்போ காலனி,புதுப்பேட்டை, இரண்டாம் உலகம், ஆயிரத்தில் ஒருவன் போன்ற பல படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் இயக்குனர் செல்வராகவன். இவர் சாணிக்காயிதம் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக களமிறங்கியுள்ளார்.
இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு நடிகை சோனியா அகர்வாலை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பின்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 4 ஆண்டுகளிலேயே பிரிந்தனர். அதனைத் தொடர்ந்து செல்வராகவன் தனது துணை இயக்குனராக பணியாற்றிய கீதாஞ்சலியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் கீதாஞ்சலி அண்மையில் தனது 35 ஆவது பிறந்தநாளை குடும்பத்தினருடன் கோலாகலமாக கொண்டாடியுள்ளார். இந்த பார்ட்டியில் நடிகர் தனுஷ் கலந்துக்கொண்டு தனது அண்ணிக்கு வாழ்த்து கூறியுள்ளார். மேலும் தனுஷின் அக்கா, நடிகை வித்யூலேகா ராமன் உள்ளிட்டோரும் கீதாஞ்சலியின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டுள்ளனர். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.