பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
"வருவானா?" சஸ்பென்ஸ் வைத்த தர்ஷா குப்தாவை சுத்துப்போடும் ரசிகர்கள்.. தீயாக பரவும் வீடியோ..!
நடிகை தர்ஷா குப்தா இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோ வைரலாகி ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவிவருகிறது.
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் குக் வித் கோமாளி 2-வது சீசனில் போட்டியாளராக கலந்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை தர்ஷா குப்தா. தனது இளம் வயதிலேயே மாடலிங் துறையில் அதிக ஆர்வம் கொண்ட தர்ஷா, முதன்முறையாக ஜீ தமிழில் "முள்ளும் மலரும்" என்ற சீரியலில் நடித்ததன் மூலம் அறிமுகமானார்.
இதன் பின் சந்திரலேகா மற்றும் செந்தூரப்பூ போன்ற சீரியல்களில் நடித்து தனது திறமையை ரசிகர்களிடையே வெளிப்படுத்தினார். இவர் நெகட்டிவ் ரோலில் நடித்தாலும், மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றார். எப்படியாவது வெள்ளித்திரையில் கதாநாயகியாக வேண்டும் என்று எண்ணிய தர்ஷா குப்தாவிற்கு பிரபல இயக்குனரான மோகன்ஜி யின் ருத்ரதாண்டவம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு தனது முழு திறமையையும் காட்டினார். எப்பொழுதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை தர்ஷா குப்தா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனைக் கண்ட நெட்டிசன்கள் வருவானா? என்று கேட்கிறீர்களே யாரை கேட்கிறீர்கள்? இதில் ஏதும் உள்நோக்கம் உள்ளதா? என்று கமெண்ட்கள் செய்து வருகின்றனர்.