#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அட.. அப்பாவையே மிஞ்சிடுவார் போல! சாக்லேட் பாயாக வந்த துருவ் விக்ரமா இது! இப்படி வேற லெவலில் மாறிட்டரே!!
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து சூப்பர் ஹிட் கொடுத்து முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ரம். எத்தகைய கதாபாத்திரமாக இருந்தாலும் அதற்கேற்றார் போல் தனது உடலமைப்பை மாற்றி முழு அர்ப்பணிப்போடு நடிக்கும் இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம். அவர் தமிழில் ஆதித்ய வர்மா என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து அவர் தனது தந்தையுடன் இணைந்து தற்போது சீயான் 60 திரைப்படத்தில் நடிக்கிறார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தை கோப்ரா படத்தை தயாரிக்கும் லலித்குமார் தனது செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.
இப்படத்திற்காக துருவ் விக்ரம் தீவிர பயிற்சிக்கு பிறகு கட்டுமஸ்தான உடலமைப்பை பெற்றுள்ளார். ஆதித்ய வர்மா திரைப்படத்தில் சாக்லெட் பாயாக வலம் வந்த அவர் தற்போது தனது தந்தையுடன் சிக்ஸ்பேக் வைத்து செம கெத்தாக இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அது வைரலாகி ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ளது.