"பட வாய்ப்புக்காக என்னனாலும் பண்ணுவீங்களா" துஷாரா விஜயனை கிழித்தெடுக்கும் நெட்டிசன்கள்..



dhusara-vijayan-latest-glamour-photos

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக அறியப்படுபவர் துஷாரா விஜயன். இவர் தமிழில் முதன்முதலில் 'போதை ஏறி புத்தி மாறி' எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் பெரிதளவில் வெற்றி பெறவில்லை.

Dhusara

இருந்தபோதிலும் தனது நடிப்பு திறமையின் மூலமும், விடாமுயற்சியினாலும் தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் பா ரஞ்சித் இயக்கத்தில் 'சார்பட்டா பரம்பரை' திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார் துஷாரா விஜயன்.

இந்தப் படத்திற்கு பின்பு நட்சத்திரம் நகர்கிறது, அநீதி போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார். மேலும் ஒரு சில திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் துஷாரா.

Dhusara

இதேபோன்ற நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை துஷாரா விஜயன். இவர் தனது சமூகவலைதள பக்கங்களில் அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வருவார். இந்நிலையில் தற்போது நீச்சல் உடையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை பதிவிட்டு உள்ளார். இப்புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் "குடும்ப குத்து விளக்கு மாதிரி வந்தீங்க பட வாய்ப்புக்காக என்னனாலும் பண்ணுவீங்களா" என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.