வீர மங்கையின் பிறந்தநாள்.! மரியாதை செலுத்தி தவெக தலைவர் விஜய் எடுத்த உறுதி.!
அந்தப் படத்தில் முதலில் இவர்தான் நடிப்பதாக இருந்தது.! ரகசியத்தை உடைத்த அமீர்.!
பிரபல திரைப்பட இயக்குனரான அமீரின் இயக்கத்தில் கடந்த 2007 ஆம் வருடம் கார்த்தியின் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் பருத்திவீரன். இந்த திரைப்படத்தின் மூலமாக திரையுலகத்திற்கு முதன் முதலாக அறிமுகமானார் நடிகர் கார்த்தி. இந்த திரைப்படம் திரையரங்குகளில் 300 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடி சாதனை படைத்தது,
ஜாதி, காதல் என்று அனைத்து விதத்திலும் கிராமத்து பின்னணியை கதைக்களமாக கொண்டு இந்த திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி கண்டது.
நடிகர் கார்த்தி திரையுலகிற்கு அறிமுகமான முதல் திரைப்படமே அவருக்கு மிகப் பெரிய வெற்றி படமாக அமைந்தது. ஆனாலும் இந்த திரைப்படத்தில் முதலில் நடிகர் கார்த்திக்கு பதிலாக அவருடைய அண்ணனும், நடிகருமான சூர்யா தான் நடிக்கவிருந்ததாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது. முதலில் பருத்தி வீரன் திரைப்படத்தில் இயக்குனர் அமீர் சூர்யாவை தான் நடிக்க வைக்க வேண்டும் என ஆசைப்பட்டதாக தெரிகிறது. இந்த தகவலை இயக்குனர் அமீர், தானே ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.