#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"கொடூரமான மரணம் வேண்டும்" இயக்குனரின் சர்ச்சைக்குரிய பேட்டி..
பாலிவுட் திரை உலகில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் அனுராக் காஷ்யப். இவர் கேங்ஸ் ஆஃப் வாஸக்பூர், தேவ் டி, அக்லி போன்ற திரைப்படங்களை இயக்கி பிரபலமான இயக்குனராக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த இந்தி சினிமாவில் தனக்கென தனி இடத்தை நிலைநாட்டி இருக்கிறார்.
தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறார். மேலும் சமீபத்தில் நடைபெற்ற பிரபலமான நிகழ்ச்சி ஒன்றில் தென்னிந்திய சினிமா தான் எனக்கு மிகவும் பிடித்தமானது என்று பேசியிந்தார் இச்செய்தி தென்னிந்திய சினிமா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் 'தங்கலான்' திரைப்படத்தை அனுராக் காஸ்யப் பெருமையாக பேசியுள்ளார். இப்படத்தின் டீசரை சமீபத்தில் பார்த்தேன். இப்படத்தின் காட்சிகள் பாலிவுட் சினிமாக்களில் கூட காண முடியவில்லை. அந்த அளவிற்கு 'தங்கலான்' திரைப்படம் உருவாகிக் கொண்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார்.
இது போன்ற நிலையில், லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் எனக்கு திரைப்படம் நடிக்க வேண்டும் என்ற ஆசை. முக்கியமாக திரைப்படத்தில் வில்லனாகவும் கடைசியில் கொடூரமான மரணம் அடைய வேண்டும் என்றும் தனது வித்தியாசமான ஆசையை வெளிப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் அனுராக்.