#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சாமி படத்தில் அந்த காட்சியை எடுத்திருக்கவே கூடாது! வேதனையடைந்த இயக்குனர் ஹரி!!
தமிழ் சினிமாவில் விறுவிறுப்பான, ஆக்ஷன் சூப்பர்ஹிட் திரைப்படங்களை இயக்கி தனக்கென தனி இடத்தைப் பிடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் ஹரி. பிரசாந்த் நடிப்பில் வெளிவந்த தமிழ் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அவர் கோவில், வேல், ஐயா, தாமிரபரணி, சிங்கம், சாமி,போன்ற வெற்றி படங்களை கொடுத்தவர்.
இவரது இயக்கத்தில் தற்போது வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் யானை. இதில் அருண் விஜய் ஹீரோவாக நடித்துள்ளார். யானை திரைப்படம் அருண் விஜயின் திரை வாழ்க்கையில் திருப்பு முனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில் அண்மையில் நேர்காணல் ஒன்றில் இயக்குனர் ஹரி விக்ரம் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான சாமி படத்தில் குறிப்பிட்ட ஒரு காட்சியை எடுத்து அதற்காக மிகவும் வருத்தப்பட்டு பேசியுள்ளார். அதாவது சாமி படத்தில் ஹீரோ விக்ரம் என்ட்ரியின் போது மாஸ், லோக்களாக இருக்க வேண்டும் என்பதற்காக இட்லியில் பீர் ஊற்றி சாப்பிடுவது போன்ற காட்சியை எடுத்திருந்தேன்.
அதற்காக நான் மிகவும் வருத்தப்படுகிறேன். ஏனெனில் நான் மதுவுக்கும், போதைக்கும் எதிரானவன். எதிர்கால தலைமுறையினர் போதை பழக்கத்திற்கு அடிமையாககூடாது என அவர் கூறியுள்ளார்.