இயக்குனர் ஜனநாதன் இறந்த இரண்டு நாட்களிலேயே மற்றுமொரு துயரம்! கண்ணீரில் மூழ்கிய குடும்பத்தார்கள்!!



director-jananathan-sister-dead

இயக்குனர் ஜனநாதன் தமிழில் ஈ, இயற்கை, பேராண்மை போன்ற படங்களை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இவர் இறுதியாக விஜய் சேதுபதி மற்றும் ஸ்ருதி நடிப்பில் லாபம் என்ற படத்தை இயக்கினார். இந்த நிலையில் படத்திற்கான எடிட்டிங் பணியில் ஈடுபட்டிருந்த அவர் வீட்டிற்கு சாப்பிட சென்ற நிலையில் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

இந்நிலையில் நீண்ட நேரமாக இயக்குனர் பணிக்கு திரும்பாததால் அவரது உதவியாளர் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். அங்கு அவர் மயங்கி ,சுயநினைவின்றி கிடந்துள்ளார். அதனை கண்டு பதறிப்போன உதவியாளர் உடனே அவரை மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு மருத்துவர்கள் இயக்குனர் ஜனநாதனுக்கு மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டதாக கூறி தீவிர சிகிச்சையளித்து வந்தனர். 

jananathan

ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி சில தினங்களுக்கு முன் உயிரிழந்தார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த திரைப்பிரபலங்கள் அவரது மறைவிற்கு கண்ணீருடன் இரங்கல் தெரிவித்தனர். இந்த நிலையில் இயக்குனர் ஜனநாதன் இறந்து இரண்டு நாட்களிகளிலேயே அண்ணனின் மரணத்தை தாங்கி கொள்ளமுடியாமல் சோகத்தில் ஆழ்ந்திருந்த அவரது தங்கை லட்சுமி என்பவரும் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இந்த அடுத்தடுத்த உயிரிழப்பு குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.