"வரலாறு காணாத பேரிடரில் தென் தமிழகம்" - மக்களை மீட்க இயக்குனர் மாரி செல்வராஜ் கோரிக்கை.!



Director Mari Selvaraj Tweet to Save South Tamilnadu 

 

தென் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களை பேய்மழை புரட்டி எடுத்துள்ளது. நாளையும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், இன்றும் - நாளையும் பள்ளி-கல்லூரிகளுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பல நகரங்கள் வெள்ளத்தின் பிடியில் சிக்கி இருக்கின்றன. பொதுமக்களை மீட்க தேசிய பேரிடர் மீட்பு படையினர் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இயக்குனர் மாரி செல்வராஜ் தனது எக்ஸ் பக்கத்தில், "வரலாறு காணாத பேரிடரில் தென் தமிழகம் சிக்கியிருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் முழுவதுமாக துண்டிக்கபட்டிருக்கிறது. கிராமங்களை சுற்றியுள்ள எல்லா குளங்களும் உடைபட்டிருக்கிறது. ஶ்ரீவைகுண்டத்துக்கு கிழக்கே உள்ள ஆற்றுபாசனத்திற்கு உட்பட்ட அத்தனை கிராமங்களின் நிலையையும் அவ்வளவு கவலை அளிக்க கூடியதாக இருக்கிறது. 

மீட்பு வாகனங்களால் படகுகளால் எதிலும் உள்ளே செல்ல முடியவில்லை . வெள்ளத்தின் வேகம் அப்படியிருக்கிறது. ஆதிநாதபுரம், செம்பூர், கரையடியூர், பிள்ளமடையூர், மாநாட்டூர், கல்லாம்பறை, தேமான்குளம், மணத்தி, இராஜபதி, குருவாட்டூர், குரும்பூர், குட்டக்கரை, தென்திருப்பேரை மேலகடம்பா, இப்படி இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களை தொடர்புகொள்ளவே முடியவில்லை. 

இந்த கிராமங்கள் எல்லாமே ஆற்றிற்கும் குளத்திற்கும் நடுவே உள்ள விவசாய வயல்வெளி கிராமங்கள், இதை கருத்தில்கொண்டு எதன் வழியாவது மீட்புபணிகளை மிக துரிதமாக மேற்கொள்ள வேண்டுகிறேன்" என்று கூறியுள்ளார்.