நடிகர் தனுஷின் கர்ணன் பட பிரபலம் வீட்டில் தடபுடலாக நடந்த விசேஷம்! தீயாய் பரவும் புகைப்படங்கள்!!



director-mari-selvaraj-wife-babyshower-function-photo-v

தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். சமூகத்தை அடிப்படையாகக் கொண்ட இப்படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டடித்தது. மேலும் இயக்குனர் மாரி செல்வராஜ்க்கு பாராட்டுகள் குவிந்தது.

அதனைத் தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜ் தற்போது தனுஷ் நடிப்பில் கர்ணன் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். கலைப்புலி தாணு இயக்கும் இப்படத்தில் கௌரி கிஷன்,லால் யோகிபாபு, ரஜிதா விஜயம் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் மேலும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் கர்ணன் திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகலாம் என ரசிகர்களால் பெருமளவில் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கர்ணன் படப்பிடிப்புகள் முடிந்து படம் வெளியிடுவதற்கான இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது.

maari selvaraj

நடிகர் மாரி செல்வராஜின் மனைவி திவ்யா. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் மாரி செல்வராஜின் மனைவி இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளார். அவருக்கு அவரது வீட்டில் கோலாகலமாக வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்து கூறியுள்ளனர். இந்நிலையில் வளைகாப்பு விழா கொண்டாடிய புகைப்படத்தை மாரி செல்வராஜ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்த நிலையில் அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

maari selvaraj