#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அஜித் படத்தை இயக்க வந்த வாய்ப்பு.. விஜய் கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்த இயக்குனர்.?
தமிழ் சினிமாவில் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற போட்டி அவ்வப்போது நிலவி வருகிறது. இதில் விஜய், அஜித் ரசிகர்கள் இணையத்தில் சண்டை போட்டுக் கொள்வது அடிக்கடி பார்க்க முடியும். இவ்வாறு அஜித், விஜய் சினிமாவில் தங்களது இடத்தை நிலைநாட்டி வெற்றி கொடி கட்டி பறந்து வருகின்றன.
அஜித்,விஜய் இருவரும் ஒரே காலகட்டத்தில் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தாலும், விஜய் ஆரம்ப காலகட்டத்தில் தன் தந்தையை வைத்து முன்னேறி சினிமாவில் நுழைந்தார். அஜித் தன் விடாமுயற்சியின் மூலமே சினிமாவில் காலடி எடுத்துவைத்தார்.
இதனையடுத்து இயக்குனர் பேரரசு தொடர்ந்து விஜய் படங்களை இயக்கி வந்தார். அப்போது ஏவிஎம் சரவணன், பேரரசு விடம் அஜித் படத்தின் கதை ஒன்று இருக்கிறது. இயக்குகிறீர்களா என்று கேட்டிருக்கிறார். வாய்ப்பு தானாக வந்ததால் வாயடைத்து போனார் இயக்குனர் பேரரசு.
இயக்குனர் பேரரசு விஜயிடம் சென்று அஜித் பட வாய்ப்பு வந்துள்ளது என்ன சொல்வது என்று தெரியவில்லை என்று கேட்டிருக்கிறார். அதற்கு இளைய தளபதி விஜய் நல்ல வாய்ப்புதானே இதில் யோசிக்க என்ன இருக்கிறது என்று பெருமிதத்துடன் கூறியிருக்கிறார். இதனை அடுத்து பேரரசு அஜித்தை வைத்து 'திருப்பதி' படத்தை இயக்கியிருக்கிறார். இச்செய்தி சமீபத்தில் வெளியாகி பரவி வருகிறது.