#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நடிக்கவே தெரில.. இதெல்லாம் ஒரு நடிப்பா?.. விஜய்யை வறுத்தெடுத்த பிரபல இயக்குனர்.. திட்டித்தீர்க்கும் ரசிகர்கள்..!!
எந்த திரைப்படங்கள் வந்தாலும் அதனை பார்த்துவிட்டு ரசிகர்களுக்கு அந்த படம் எப்படி இருக்கிறது? என்பதை கூறும் நபர்களில் முக்கியமானவர் ப்ளூ சட்டை மாறன். இவர் தளபதி பிறந்தநாளுக்கு டுவீட் போட்டு ரசிகர்களை சீண்டினார்.
அவரது பதிவில், முதல்வர் ஆசை இருந்தா மட்டும் போதாது. சிகரெட் பிடிக்கும் போஸ்டரை ரிலீஸ் பன்றதும், போஸ்டர் அடிக்க சொல்லி போடுறதும் எந்த வகையான சமூக அக்கறை? என்று எழுதியிருந்தார். இதற்கு விஜய் ரசிகர்கள் பலரும் பதிலடி கொடுத்து வந்தனர்.
இந்த நிலையில் அதேபோன்று மற்றொரு டுவீட் ரசிகர்களுக்கு ஆவேசத்தை உண்டாக்கியுள்ளது. இயக்குனராக அறியப்பட்ட ராஜ்குமார், வாரிசு படத்தில் சரத்குமார் மட்டுமே அழகாக நடித்திருந்தார் என்றும், விஜயின் நடிப்பு சரியில்லை. அவர் தப்பு தப்பாக நடித்திருந்தார் என்றும் கூறியதை, அவர் பேசிய வீடியோவுடம் வைத்து டுவீட் போட்டிருக்கிறார்.
வாரிசு படத்தில் சரத்குமார் மட்டுமே அழகாக நடித்திருந்தார். விஜய் தப்பு தப்பாக நடித்திருந்தார் - நடிகர்/இயக்குனர் ராஜகுமாரன் காட்டமான விமர்சனம், pic.twitter.com/URVtKqBSna
— Blue Sattai Maran (@tamiltalkies) June 26, 2023
ராஜ்குமார் பேசிய வீடியோவில், "சமீபத்தில் வாரிசு படம் வெளிவந்தது. படத்தில் அழகாக நடித்திருந்த ஒரே நடிகர் சரத்குமார் மட்டும் தான். வேறு யாரும் சரியாக நடிக்கவில்லை. விஜய்யும் தப்பு தப்பாக நடித்திருந்தார். அப்பா முன் இப்படி தான் ஆணவமாக நடந்து கொள்வதா?, உங்களது தந்தை முன் நீங்கள் திமிரை காட்டலாம்.
அதை ஸ்கிரீனில் சொல்லி மற்ற பசங்களையும் தந்தை முன் அவதூறாக பேச தூண்டாதீர்கள் என்று பேசியிருந்தார். இந்த டுவீட்க்கு விஜய் ரசிகர்கள் தக்க பதிலடி கொடுத்து வரும் நிலையில், ப்ளூ சட்டை மாறனையும், ராஜ்குமாரையும் வறுத்தெடுத்து வருகின்றனர்.