விஜயகாந்தின் வீட்டிற்கு நேரில் சென்று, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய நடிகர் சசிகுமார்.!



Director Sasikumar Visit Late Actor Vijayakanth House 

 

மறைந்த நடிகர் விஜயகாந்த் அவர்களின் உடல், சென்னையில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரின் மறைவுக்கு பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

அதனைத்தொடர்ந்து, தற்போது அவரின் நினைவிடத்திற்கு சென்று பலரும் தங்களின் அஞ்சலியை பதிவு செய்து வருகின்றனர். பிரேமலதா விஜயகாந்த் மற்றும் விஜயகாந்தின் மகன்கள் ஆகியோரையும் சந்தித்து தங்களின் அஞ்சலியை பதிவு செய்து வருகின்றனர். 

இந்நிலையில், இன்று நடிகர் மற்றும் திரைப்பட இயக்குனர் சசிகுமார், ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஆகியோர், சென்னை சாலிகிராமத்தில் இருக்கும் விஜயகாந்தின் இல்லத்திற்கு நேரில் சென்றனர். 

அங்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அவரின் மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் ஆகியோருக்கு தனது ஆறுதலை கூறினார்.