#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
முதல் முறையாக வெளியான இயக்குனர் செல்வராகவன் மனைவி மற்றும் மகன் புகைப்படம்!
தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான ஒரு இயக்குனர் செல்வராகவன். இவரது இயக்கத்தில் வெளிவந்த பல்வேறு படங்கள் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. சமீபத்தில் சூர்யா நடிப்பில், செல்வராகவன் இயக்கத்தில் என்ஜிகே படம் திரைக்கு வந்தது. படம் எதிர்பார்த்த அளவு வெற்றிபெறவில்லை.
குடும்ப வாழ்க்கையை பொறுத்தவரை இவர் பிரபல தமிழ் நடிகர் தனுஷின் அண்ணன் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. அதேபோல், பிரபல தமிழ் நடிகை சோனியா அகர்வாலை திருமணம் செய்துகொண்ட இவர் அதன்பின்னர் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்றனர்.
அதன்பின்னர் கீதாஞ்சலி என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார் செல்வராகவன். இந்நிலையில் இவரது மனைவி கீதாஞ்சலி தன்னுடைய மகனின் புகைப்படத்தை டுவிட்டரில் போட்டுள்ளார். தனது மகனின் புகைப்படத்தை செல்வராகவன் வெளியிடுவது மிகவும் குறைவு.